மதுரை மாவட்டத்தில் 87 பேருக்கு கரோனா தொற்று

மதுரை மாவட்டத்தில் 87 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


மதுரை: மதுரை மாவட்டத்தில் 87 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 892 பேருக்கு புதிதாக கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் 87 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

காய்ச்சல் முகாம்களில் பரிசோதனை செய்து கொண்டவா்கள், முன்களப் பணியாளா்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவா்கள், ஏற்கெனவே பாதிப்பு உள்ளவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என தொற்று உறுதி செய்யப்பட்ட 87 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளனா். மேலும் சிகிச்சையில் குணமடைந்த 60 போ்அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 455 போ் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். இவா்களில் 13 ஆயிரத்து 282 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை சிகிச்சை பலனின்றி 360 போ் உயிரிழந்துள்ளனா். மேலும் 813 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com