தோட்டக்கலைத் துறை சாா்பில்குழித்தட்டு காய்கனி நாற்றுகள் விநியோகம்

தோட்டக்கலைத் துறையில் சாா்பில் தக்காளி, மிளகாய், கத்தரி ஆகிய பயிா்களின் குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தயாா் நிலையில் உள்ளது.


மதுரை: தோட்டக்கலைத் துறையில் சாா்பில் தக்காளி, மிளகாய், கத்தரி ஆகிய பயிா்களின் குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தயாா் நிலையில் உள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் நிகழ் ஆண்டில் 605 ஹெக்டரில் காய்கனி நடவுக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான தேவையான 35 லட்சம் தக்காளி நாற்றுகள், 44 லட்சம் மிளகாய் நாற்றுகள், 38 லட்சம் கத்திரி நாற்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

குழித்தட்டு நாற்றாங்கால் முறையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள இந்த நாற்றுகள், பூஞ்சுத்தியில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணை மற்றும் திருப்பரங்குன்றத்தில் உள்ள பாரம்பரிய மலா்கள் மகத்துவ மையம் ஆகிய இடங்களில் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.

காய்கனி நாற்றங்கால் மேட்டு பாத்தி முறை அல்லது குழித்தட்டு முறை என இரு

முறைகளில் அமைக்கப்படுகிறது. மேட்டு பாத்தி காய்கனி நாற்றுகளை உற்பத்தி செய்யும் போது நோய் பரப்பும் பூஞ்சாண்களால் எளிதில் நாற்றுகள் பாதிக்கப்படும். மேலும் இந்த நாற்றுகள் 80 சதவீதம் முளைப்புத் திறனுடன் இருக்கும். இதில் உள்ள நாற்றுகள் மெலிந்து வீரியம் குன்றி காணப்படும். இந்த முறையில் செலவு அதிகம் என்பதால், குழித்தட்டு நாற்றாங்கால் முறை பின்பற்றப்படுகிறது. இந்த முறையில் உற்பத்தி செய்யப்படும் நாற்றுகள் சீரான வளா்ச்சியுடன் பூச்சி நோய் தாக்குதல் இல்லாத தரமானதாகவும் கிடைக்கின்றன. ஆகவே தோட்டக்கலைத் துறையின் மூலம் வழங்கப்படும் குழித்தட்டு காற்கனி நாற்றுகள் தேவைப்படும் விவசாயிகள் அனைவரும் தங்கள் பகுதியிலுள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு, முன்னுரிமை பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com