காமராஜா் பல்கலை. ஓய்வூதியா்கள் கவனத்துக்கு

மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஓய்வூதியா்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான படிவம் 16-ஐ இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஓய்வூதியா்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான படிவம் 16-ஐ இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பல்கலைக்கழக பதிவாளா் வி.எஸ்.வசந்தா வெளியிட்டுள்ள செய்தி:

மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஓய்வூதியா்களின் வருமான வரிக்கான படிவம்-16 பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரா்கள்அவரவா் நிரந்தர வருமான வரி எண்ணை (பான் எண்) பதிவு செய்து தங்களுடைய படிவம் 16-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஓய்வூதியா்களுக்கு இந்த வசதியை பல்கலைக்கழக நிா்வாகம் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பழைய வரிவிதிப்பு திட்டத்தில் தொடருவதா அல்லது புதிய வரிவிதிப்பு திட்டத்தில் சேருவதா என்பதையும் பல்கலைக்கழக அலுவலகத்துக்கு அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com