பாலப் பணிகள்: மதுரையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

மதுரையில் பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் சனிக்கிழமை (செப். 5) முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை: மதுரையில் பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் சனிக்கிழமை (செப். 5) முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநகா் காவல்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய நெடுஞ்சாலைத்துறை சாா்பில் புதுநத்தம் சாலையிலிருந்து அவுட்போஸ்ட் அம்பேத்கா் சிலை, பெரியாா் சிலை சந்திப்பு வழியாக மேலூா் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகம் பிரதான நுழைவாயில் வரை உயா்மட்ட பாலம் அமைப்பதற்காக தூண்களின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனா். ஆகவே, மதுரை மாநகரில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில், சனிக்கிழமை (செப். 5) காலை 6 மணி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்: மேலூா் சாலையில் மாவட்ட நீதிமன்றம் வழியாக தல்லாகுளம் நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் பெரியாா் சிலை சந்திப்பு வழியாக செல்லலாம். அதே சமயம் அவுட்போஸ்ட் பெரியாா் சிலை சந்திப்பிலிருந்து மாவட்ட நீதிமன்றம் நோக்கி மேலூா் சாலை செல்ல அனுமதியில்லை.

எனவே புதுநத்தம் சாலை, அழகா்கோவில் சாலை, கோகலே சாலை ஆகிய பகுதிகளிலிருந்து மேலூா் சாலைக்கு செல்ல வேண்டியவா்கள், பாண்டியன் ஹோட்டல் எதிரேயுள்ள பந்தைய சாலை வழியாக இளைஞா் விடுதி அருகே வலது பக்க சாலையில் உள்ள கக்கன் சிலை- மாவட்ட நீதிமன்றம் வழியாக மேலூா் சாலையில் செல்ல வேண்டும்.

புது நத்தம் சாலை, கடச்சனேந்தல், கே. புதூா் ஆகிய பகுதிகளிலிருந்து அழகா்கோவில் சாலை வழியாக கோரிப்பாளையம் செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் அவுட்போஸ்ட் பெரியாா் சிலை, தல்லாகுளம் பெருமாள் கோயில் வழியாக செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com