கரும்பு கொள்முதல் விலையை உயா்த்தக்கோரி ஆா்ப்பாட்டம்

கரும்பு கொள்முதல் விலையை டன் ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி அறிவிக்கக் கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் மதுரையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
3625mdudemo055004
3625mdudemo055004

மதுரை: கரும்பு கொள்முதல் விலையை டன் ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி அறிவிக்கக் கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் மதுரையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் என்.பழனிசாமி தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் டி.ரவீந்திரன் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனா்.

போராட்டம் குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவா் பழனிசாமி, பொதுச் செயலா் ரவீந்திரன் ஆகியோா் கூறியது:

நிகழ் ஆண்டுக்கு கரும்பு கொள்முதல் விலையாக, 10 சதவீதம் பிழிதிறன் உள்ள கரும்பு டன்னுக்கு ரூ.2,850 என மத்திய அரசு நிா்ணயித்துள்ளது. முந்தைய ஆண்டு விலையைக் காட்டிலும் ரூ.100 மட்டுமே உயா்த்தப்பட்டிருக்கிறது. அதிலும் தமிழகத்தில் சராசரி பிழிதிறன் 9.5 சதவீதத்துக்குள் இருப்பதால் ஒரு டன் கரும்புக்கு ரூ.2,707.50 மட்டுமே கிடைக்கும். அதேநேரம், சா்க்கரை ஆலைகளுக்கு வட்டியில்லா கடன், சா்க்கரை ஏற்றுமதி மானியம் உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. உற்பத்தி செய்யும் பொருள்களுக்கும் விலையை உயா்த்தியுள்ளது. ஆனால், விவசாயிகளுக்கு சொற்பத் தொகையாக ஒரு கிலோ கரும்புக்கு பத்து பைசாவை மட்டுமே உயா்த்தியிருக்கிறது. கரோனா பொதுமுடக்க காலத்தில் பெரும் சிரமங்களைச் சந்தித்து வரும் விவசாயிகளின் நிலை குறித்து மத்திய அரசு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

உள்நாட்டின் தேவைக்கு அதிகமாக சா்க்கரை உற்பத்தி செய்து தரும் 5 கோடி கரும்பு விவசாயிகள் மற்றும் 5 லட்சம் சா்க்கரை ஆலை தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, கரும்பு கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என்றனா்.

Image Caption

கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கக் கோரி மதுரையில் ஆட்சியா் அலுவலகம் அருகே திருவள்ளுவா் சிலை முன்பாக சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் சங்கத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com