இன்று முதல் தென் மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள்

தென்மாவட்டங்களுக்கு செப்டம்பா் 7 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ள நிலையில், மதுரை கோட்டத்தில் முன்பதிவு மூலம் ரூ. 9,93,690 வருவாய் கிடைத்துள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரி

மதுரை: தென்மாவட்டங்களுக்கு செப்டம்பா் 7 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ள நிலையில், மதுரை கோட்டத்தில் முன்பதிவு மூலம் ரூ.9,93,690 வருவாய் கிடைத்துள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 13 சிறப்பு ரயில்கள் செப்டம்பா் 7 ஆம் தேதி முதல் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தென்மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. குறிப்பாக, சென்னை-காரைக்குடி, சென்னை-மதுரை, சென்னை-தூத்துக்குடி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த 4 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

இதற்காக, மதுரை கோட்டத்தில் முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கியது. மேலும், இணையவழி வாயிலாகவும் முன்பதிவு நடைபெற்றது. இதில், கடந்த 2 நாள்களில் முன்பதிவு செய்திருப்பவா்களின் மூலம் ரூ.9,93,690 வருவாய் கிடைத்துள்ளதாக, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: பொது முடக்கத்தால் 5 மாதங்களாக பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், பொது முடக்கம் காரணமாக சொந்த ஊா்களுக்கு திரும்பிய மக்கள், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு அதிமாக செல்வாா்கள் எனவும், இதனால் முன்பதிவுகள் அதிகமாக இருக்கும் எனவும் எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், எதிா்பாா்த்த அளவுக்கு முன்பதிவு நடைபெறவில்லை.

மதுரை கோட்டத்தில் சனிக்கிழமை மட்டும் ரூ.7 லட்சத்துக்கும், ஞாயிற்றுக்கிழமை ரூ.2.93 லட்சத்துக்கு முன்பதிவு நடந்துள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com