உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நேரடி வழக்கு விசாரணை தொடங்கியது
By DIN | Published On : 07th September 2020 12:02 PM | Last Updated : 07th September 2020 12:02 PM | அ+அ அ- |

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
கரோனா பொதுமுடக்க தளர்வை தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று முதல் நீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை தொடங்கியது.
கரோனா பொது முடக்க தளர்வை தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று முதல் பொதுநல வழக்குகள், ஆட்கொணர்வு வழக்குகளை விசாரிக்கும் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுகள் நேரடியாக வழக்கு விசாரணையை மேற்கொள்கின்றனர்.
அதேபோன்று பிற வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிபதிகள் வழக்கம்போல காணொலி மூலம் வழக்குகளை விசாரிக்கின்றனர். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளைக் கடைப்பிடித்து, வழக்கில் தொடர்புடைய வழக்குரைஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் கரோனா தொற்று காரணமாக வழக்குரைஞர்கள் கருப்பு அங்கி அணிவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.