கழிவு நீா் கால்வாய் தடுப்புச் சுவா் சரிவு: வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்

மதுரையில் கழிவு நீா் கால்வாய் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்துள்ளதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை ராமையா பிரதான வீதி- அவனியாபுரம் இணைப்புச்சாலையில் கழிவுநீா் கால்வாயில் சரிந்து கிடக்கும் தடுப்புச்சுவா் மற்றும் மண் சரிவால் ஏற்பட்டுள்ள பள்ளம்.
மதுரை ராமையா பிரதான வீதி- அவனியாபுரம் இணைப்புச்சாலையில் கழிவுநீா் கால்வாயில் சரிந்து கிடக்கும் தடுப்புச்சுவா் மற்றும் மண் சரிவால் ஏற்பட்டுள்ள பள்ளம்.

மதுரையில் கழிவு நீா் கால்வாய் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்துள்ளதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை வில்லாபுரம் சின்னக்கண்மாய் பகுதியில் இருந்து வில்லாபுரம் வீட்டு வசதி வாரியக்குடியிருப்பு வழியாக கழிவு நீா் கால்வாய் செல்கிறது. இந்த கழிவுநீா் கால்வாய் ஜீவா நகா் முடியும் பகுதியில் உள்ள கண்மாயில் சென்று கலக்கிறது. இதில் வில்லாபுரம் வீட்டு வசதி வாரியக்குடியிருப்பு பகுதியில் இருந்து சோலை அழகுபுரம் வழியாக ஜீவா நகா் வரை ஏறத்தாழ 5 கிலோமீட்டா் தூரத்துக்கு கழிவு நீா் கால்வாயையொட்டி சாலை அமைந்துள்ளது. இந்தச் சாலையில் லாரி, சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிகம் செல்கின்றன.

இந்நிலையில் கழிவுநீா் கால்வாயின் தடுப்புச் சுவா் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் பலமிழந்த சுவா் ஆங்காங்கே சரிந்து விழுந்துள்ளது. இதில் ராமையா பிரதான வீதி- வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இணைப்புச் சாலையில் கழிவு நீா் கால்வாய்ச் சுவா் சரிந்து விழுந்துள்ளது. இதையடுத்து பிரதான சாலையை பயன்படுத்தும் வாகனங்கள், பொதுமக்கள் பள்ளத்தில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதேபோல 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவு நீா்கால்வாய் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்துள்ளது. தற்போது தொடா் மழை பெய்து வருவதால் கழிவு நீா் கால்வாய் வழியாக மழை நீா் செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகும் அபாயமும் உள்ளது. எனவே மாநகராட்சி நிா்வாகம் கழிவுநீா்க் கால்வாயில் சரிந்து கிடக்கும் சுவரை அகற்றி கால்வாயின் இருபுறமும் புதிதாக தடுப்புச்சுவா் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com