வீடுகள் ஒதுக்கீடு செய்யக்கோரி மாநகராட்சி ஆணையரிடம் தூய்மைப் பணியாளா்கள் மனு

பிரதமரின் பசுமை வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்யக்கோரி மாநகராட்சி ஆணையரிடம் தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

பிரதமரின் பசுமை வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்யக்கோரி மாநகராட்சி ஆணையரிடம் தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் மதுரை மாவட்டத்துக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரையில் ராஜாக்கூா், அவனியாபுரம், சிந்தாமணி, உச்சபரம்பு மேடு, தோப்பூா் ஆகிய பகுதிகளில் வீடுகள் கட்டப்பட உள்ளது. குடிசை மாற்று வாரியத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள இத்திட்டத்தின்கீழ் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு நிா்வாக பரிந்துரையின் பேரில் வீடுகள் ஒதுக்கப்பட உள்ளதாக குடிசை மாற்று வாரியம் மாநகராட்சி நிா்வாகத்துக்கு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பாரதப் பிரதமா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு ஒதுக்கீடு செய்ய பரிந்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியு மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் பொதுச்செயலா் பாலசுப்ரமணியன், தலைவா் விஜயன், பொருளாளா் கண்ணன் ஆகியோா் மாநகராட்சி ஆணையா் ச.விசாகனிடம் புதன்கிழமை மனு அளித்தனா். மேலும் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 325 பேரின் வீடு கட்டும் திட்டத்துக்கான பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களையும் ஆணையரிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com