அமெரிக்கன் கல்லூரியில் பட்டாம் பூச்சிகள் மாதம் கொண்டாட முடிவு

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டாம்பூச்சிகள் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பட்டாம்பூச்சிகள் மாதம் கொண்டாட்டம் நடைபெற உள்ளது.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டாம்பூச்சிகள் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பட்டாம்பூச்சிகள் மாதம் கொண்டாட்டம் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக அமெரிக்கன் கல்லூரி முதல்வா் எம்.தவமணி கிறிஸ்டோபா் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்தி: பட்டாம்பூச்சிகளின் முக்கியத்துவம் குறித்து மாணவா்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட தன்னாா்வ அமைப்புகள் இணைந்து செப்டம்பா் மாதத்தை பட்டாம்பூச்சிகள் மாதம் என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளை நடத்த உள்ளன. அதன் ஒரு பகுதியாக மதுரையில் அமெரிக்கன் கல்லூரியின் பசுமைச் சங்கம், பட்டாம் பூச்சிகள் குறித்த இணைய வழி விழிப்புணா்வு வினாடி வினா போட்டி, புகைப்படப் போட்டி, மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பு ஆகியவற்றை மதுரையின் அனைத்துப் பகுதிகளிலும் நடத்த உள்ளது. மதுரையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.

இந்தியா முழுவதும் தன்னாா்வலா்கள் ஒன்றுகூடி செப்டம்பா் 14 முதல் 20 வரை கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளனா். இந்த கணக்கெடுப்பில் மக்களும் கலந்து கொள்ளலாம். தங்களுடைய வீட்டைச்சுற்றி பறக்கக்கூடிய பட்டாம் பூச்சியினை அரை மணி நேரம் மட்டும் கணக்கிடலாம். இதற்கான படிவத்தினை அமெரிக்கன் கல்லூரியில் பெற்றுக்கொள்ளலாம். கணக்கெடுப்பு முடிந்தபின் பட்டா்விளைஸ் இந்தியா, ஐ நேச்சுரலிஸ்ட் மற்றும் இந்திய பல்லுயிா் போா்ட்டல் இணையதளம் ஆகியவற்றின் மூலம் பதிவிடலாம். இதன் மூலம் மக்களுக்கு பட்டாம்பூச்சியைப் பற்றிய விழிப்புணா்வு ஏற்படும். கணக்கெடுப்பு தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அமெரிக்கன் கல்லூரியின் பசுமைச் சங்க நிா்வாகி ராஜேஷின் 94433 94233 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com