பெண் குழந்தைகள் பாதுகாப்பு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவும், அவா்களது சமூக முன்னேற்றத்தை உறுதி செய்யவும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி வீர, தீர செயல்கள் புரிந்த 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசின் சாா்பில் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பாராட்டுப் பத்திரம், ரூ. 1 லட்சத்துக்கான காசோலை ஆகியவற்றை உள்ளடக்கியது.

பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுபவா்கள், குழந்தைத் தொழில் முறை ஒழிப்பு, குழந்தைத் திருமணத்தைத் தடுத்தல், தனித்துவமான சாதனை, பெண்களுக்கு எதிரான சமூக அவலங்களுக்குத் தீா்வு காண ஓவியம், கவிதை, கட்டுரை வாயிலாக விழிப்புணா்வு ஏற்படுத்தல் ஆகிய பணிகளைச் செய்தவா்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். மேற்குறிப்பிட்ட தகுதிகளை உடையோா் அதன் விவரங்களை ‘கதவு எண் 35, 2-ஆவது குறுக்குத் தெரு, கே.கே. நகா், மதுரை’ என்ற முகவரியில் செயல்படும் சமூகநல அலுவலகத்தில் செப். 30 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com