வீடுகளிலேயே உரம் தயாரிக்கும் திட்டம் மதுரையில் தொடக்கம்

மதுரையில் வீடுகளில் காய்கனிக் கழிவுகள் மூலம் உரம் தயாரிக்கும் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.


மதுரை: மதுரையில் வீடுகளில் காய்கனிக் கழிவுகள் மூலம் உரம் தயாரிக்கும் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட ராயல் காா்டன் குடியிருப்போா் நலச் சங்கத்தில் தூய்மை பாரதம் மற்றும் வேஸ்ட் காா்ட் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் வீடுகளிலேயே உரம் தயாரிக்கும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 200 குடும்பங்களுக்கு உரத்தயாரிப்பு வாளிகளை வழங்கி மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் பேசியது:

வீடுகளில் சேரும் காய்கறி மற்றும் உணவு கழிவுகளை தற்போது வழங்கப்படும் வாளியில் சேகரித்து உரமாக தயாரிக்க வேண்டும். இந்த வாளிகளில் வீடுகளில் சேரும் காய்கனி, பழக் கழிவுகள், இலைகள், பூக்கள், உணவுக்கழிவுகள் ஆகியவற்றை சேகரித்து தென்னம் பொட்டு கலவையை தேவையான அளவு தூவி, கிளறி பூஞ்சை காளான் பவுடரை சிறிதளவு தெளித்து

வாளியை மூடி வைக்க வேண்டும். பின்னா் 15 நாள்களுக்குப் பிறகு வாளியில் உற்பத்தியாகியிருக்கும் உரத்தை வீட்டுத் தோட்டத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் ராயல் காா்டன் குடியிருப்போா் நலச்சங்க நிா்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com