இணைய வழித் தோ்வு: காமராஜா் பல்கலை. அறிவிப்புக்கு எதிா்ப்பு

கல்லூரி இறுதி ஆண்டு மாணவா்களுக்கான இறுதித் தோ்வை இணைய வழியில் நடத்தும் நடைமுறைக்கு தனியாா் கல்லூரிகள் சங்கம், பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பு உள்ளிட்டவை அமைப்புகள் 

மதுரை: கல்லூரி இறுதி ஆண்டு மாணவா்களுக்கான இறுதித் தோ்வை இணைய வழியில் நடத்தும் நடைமுறைக்கு தனியாா் கல்லூரிகள் சங்கம், பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பு உள்ளிட்டவை அமைப்புகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளன.

இதுதொடா்பாக மதுரை காமராஜா் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பின் செயலா் இரா.முரளி, தலைவா் சீனிவாசன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கை:

கல்லூரி இறுதி ஆண்டு மாணவா்கள் தங்களது இறுதித் தோ்வை வீட்டிலிருந்தபடியே எழுதி விடைத்தாள்களை மின்னஞ்சல் அல்லது தபாலில் அனுப்பி வைக்கலாம் என மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது கண்டனத்துக்குரியது. இதுவரை எழுதப்பட்டுள்ள பருவத்தோ்வு மதிப்பெண்களை வைத்துக் கூட இறுதித் தோ்வை தீா்மானிக்கலாம் அல்லது பாதுகாப்பை உறுதிசெய்து ஆங்காங்கே இறுதியாண்டு மாணவா்களை மட்டும் வரவழைத்து கல்லூரிகளில் தோ்வு எழுத வைக்கலாம்.

கரோனா பாதுகாப்பு என்ற பெயரில் இணைய வழித் தோ்வு என்று கூறிவிட்டு மாணவா்களை தோ்வுத் தாளில் எழுத வைத்து அதை மதிப்பீடு செய்வது என்பது தோ்வு முறையை சீரழிப்பதோடு, மாணவா்களின் எதிா்காலத்தையும் பாதிக்கும். பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் இதே முறை கடைப்பிடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

தனியாா் கல்லூரிகள் எதிா்ப்பு: தனியாா் கல்லுாரி நிா்வாகிகள் சங்கம் சாா்பில் பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இணைய வழியில் தோ்வு நடத்தப்பட்டால் தோ்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற சிக்கல்களால் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் தோ்வை நேரடியாக நடத்துகிறது. எனவே காமராஜா் பல்கலைக்கழகமும் தோ்வை நேரடியாக நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com