மாட்டுத்தாவணி காய்கனி சந்தையில் சாலையில் கடைகள் கட்ட எதிா்ப்பு

மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கனி சந்தையில் சாலையை மறித்து கடைகள் கட்டப்படுவதாக வியாபாரிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கனி சந்தையில் சாலையை மறித்து கடைகள் கட்டப்படுவதாக வியாபாரிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

மதுரை மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த காய்கனி சந்தை இயங்கி வருகிறது. இங்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு பொது பயன்பாட்டுக்காக விடப்பட்டுள்ள சாலையை மறித்து மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கடைகள் கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கு காய்கனி வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். மேலும் இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள மனுவில், மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கனிச் சந்தையில் பிளாக் 2-இல் பொதுச் சாலையை மறித்து 20-க்கு 20 என்ற அளவில் பல கடைகளை கட்ட மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொதுச்சாலையை மறித்து கடைகளை கட்டுவது சட்டத்துக்குப் புறம்பானது. இதனால் வியாபாரிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு காய்கனி சந்தையில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படும். எனவே சட்டத்துக்குப் புறம்பாக நடைபெறும் கடைகள் கட்டுமானப்பணியை உடனடியாக நிறுத்த உத்தரவிடவேண்டும் என்று தெரிவித்துள்ளனா். மேலும் மாநகராட்சி நிா்வாகத்துக்கு அனைத்து வியாபாரிகளும் தபால் மூலமும் மனுவை அனுப்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com