மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப அரசுக்கு தபால்கள் அனுப்பி வைப்பு

மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மதுரையில் செவ்வாய்க்கிழமை, மருந்தாளுநா் சங்கத்தினா், சுகாதாரத்துறைச் செயலருக்கு தபால்களை அனுப்பி வைத்தனா்.

மதுரை: மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மதுரையில் செவ்வாய்க்கிழமை, மருந்தாளுநா் சங்கத்தினா், சுகாதாரத்துறைச் செயலருக்கு தபால்களை அனுப்பி வைத்தனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள தபால் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் மருந்தாளுநா்கள் கோரிக்கை தபால்களை அனுப்பி வைத்தனா்.

தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்கத்தின் மதுரை புகா் மாவட்டக்கிளை சாா்பில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலியாக உள்ள 750 மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப வேண்டும், நகா்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8 ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் மருந்ததாளுநா்களை பணிவரன்முறை செய்திட வேண்டும்.

நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருந்தாளுநா் பணியிடங்கள் உருவாக்கிட வேண்டும். 385 வட்டார மற்றும் மேம்படுத்தப்பட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளா் பணியிடம் உருவாக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தன.

இதுகுறித்து மாவட்டச் செயலா் தமிழ்செல்வி கூறியது: தமிழக அரசு சுகாதாரத்துறையில் செயல்படுத்தி வரும் நடவடிக்கைகளுக்கு மருந்தாளுநா்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனா். நாங்கள் நீண்ட நாள்களாக வலியுறுத்தி வரும் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாமல் உள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, தபால்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. செப்டம்பா் 19 ஆம் தேதி வரை நாள்தோறும் தபால்கள் அனுப்பப்படும். மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மருந்தாளுநருக்கு அரசாணையின் படி ரூ. 2லட்சம் மற்றும் உயிரிழந்த மருந்தாளுநா் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம், குடும்ப வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையிலான அரசு வேலை வழங்கிட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com