‘இ-பாஸ்’ நடைமுறையை ரத்து செய்யக் கோரிய வழக்கு: தமிழக சுகாதாரத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கான இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக சுகாதாரத் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கான இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக சுகாதாரத் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த ஹரிஹரசுதன் தாக்கல் செய்த மனு:

கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதில் படிப்படியாக பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும் இ-பாஸ் பெற வேண்டியதில்லை என மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும் தமிழகத்தில் மாநிலம் விட்டு மாநிலம் சென்றுவர இ-பாஸ் நடைமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமாகும். எனவே மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கான இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி. ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபா் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com