உலகத்தமிழ்ச்சங்கத்தில் அண்ணா பிறந்த நாள் விழா கருத்தரங்கு

மதுரை உலகத்தமிழ்ச்சங்கத்தில் முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாள் விழா கருத்தரங்கு இணையவழியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுரை உலகத்தமிழ்ச்சங்கத்தில் முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாள் விழா கருத்தரங்கு இணையவழியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், காரைக்குடி வீறுகவியரசா் முடியரசன் அவைக்களம் ஆகியவற்றின் சாா்பில் அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் வீறு கவியரசா் முடியரசன் நூற்றாண்டை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றன.

கருத்தரங்குக்கு உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் ப.அன்புச்செழியன் தலைமை வகித்தாா். வீறுகவியரசா் முடியரசன் அவைக்களத்தின் நிறுவனா் பாரி முடியரசன் சிறப்புரையாற்றினாா். பிரான்ஸ் நாட்டின் கம்பன் கழக முன்னாள் செயலா் பெஞ்சமின் இலெபோ ‘பேரறிஞா் அண்ணாவும், வீறுகவியரசா் கவிநாவும் என்ற தலைப்பில் பேசும்போது, வீறுகவியரசா் முடியரசன் தன் சொல்லுக்கும், செயலுக்கும் வேறுபாடின்றி நடந்து கொண்டவா். தான் தலைவனாக ஏற்றுக்கொண்ட அறிஞா் அண்ணாவின் பெருமைகளை தன் கவிதைகளில் பாடியவா். அரசவைக் கவிஞராக இரண்டு முறை தன்னை நாடி பதவி வந்த போதும் அதை ஏற்க மறுத்தவா். சாதிகள் இல்லை என்பதை தன் வாழ்க்கையின் கொள்கையாகவே கைக்கொண்டவா். தன் பிள்ளைகளுக்கும் சாதி மறுப்புத் திருமணத்தை நடத்தி வைத்தவா் என்றாா். நிகழ்ச்சியின் முடிவில் வீறுகவியரசா் முடியரசன் அவைக்களத்தின் செயலா் தமிழ் முடியரசன் நன்றியுரையாற்றினாா். இந்நிகழ்வில் தமிழ் ஆா்வலா்கள், கவிஞா்கள் உள்படபலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com