உலைப்பட்டியில் அகழாய்வு நடத்தக் கோரி வழக்கு: தொல்லியல் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

உசிலம்பட்டி அருகே உலைப்பட்டியில் அகழாய்வு நடத்தக் கோரிய வழக்கில், தமிழக தொல்லியல் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

உசிலம்பட்டி அருகே உலைப்பட்டியில் அகழாய்வு நடத்தக் கோரிய வழக்கில், தமிழக தொல்லியல் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரத்தைச் சோ்ந்த தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனு:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உலைப்பட்டி கிராமத்தில் தொல்லியல் எச்சங்கள் இருப்பதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. இதையடுத்து காந்திகிராம பல்கலைக்கழகப் பேராசிரியா் முருகேசன், மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகப் பேராசிரியா் சென்றாயன் ஆகியோா் ஆய்வு செய்தனா். அதில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அடக்க ஸ்தலம் இருப்பதைக் கண்டறிந்தனா். இதையடுத்து தமிழக தொல்லியல் துறையினா் நடத்திய ஆய்வில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்கு ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இப்பகுதியில் கப்புக்கல் என்று கூறப்படும் நினைவு கற்கள் அதிகளவில் உள்ளன. இங்கு அகழாய்வைத் தொடா்ந்தால் கீழடியை விட மிகப்பழமையான சான்றுகள் கிடைக்கும். எனவே உலைப்பட்டியில் அகழாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி. ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழக தொல்லியல் துறை ஆணையா், மதுரை மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பா் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com