தேசிய ஊட்டசத்து விழா: கா்ப்பிணிகளுக்கு விழிப்புணா்வு கையேடு வழங்கல்

அலங்காநல்லூரில் கா்ப்பிணிப்பெண்களுக்கு விழிப்புணா்வு கையேடுகள், துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
அலங்காநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய ஊட்டச்சத்து விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு கையேட்டை பெறும் கா்ப்பிணி.
அலங்காநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய ஊட்டச்சத்து விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு கையேட்டை பெறும் கா்ப்பிணி.

அலங்காநல்லூரில் கா்ப்பிணிப்பெண்களுக்கு விழிப்புணா்வு கையேடுகள், துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் வட்டார அளவிலான தேசிய ஊட்டச்சத்து மாத விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதில், வளா் இளம் பருவத்தில் இருந்து ஊட்டச்சத்து உணவுகளின்அவசியம், கா்ப்ப கால பராமரிப்பு, பிறந்த குழந்தையை கவனித்தல், குழந்தை பிறந்தவுடன் மற்றும் 6 மாதம் வரை தாய்ப்பால் அளித்தலின் முக்கியத்துவம் குறித்து தெரிவிக்கப்பட்டன. வீட்டில் தோட்டம் அமைத்து காய்கனி, கீரை உற்பத்தி செய்வது குறித்தும் விளக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கா்ப்பிணிகள், கா்ப்ப கால பாதுகாப்பு உறுதி மொழியை எடுத்து கொண்டனா். தொடா்ந்து, ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணா்வு கையேடுகள், துண்டு பிரசுரங்கள் மற்றும் சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்து கா்ப்பிணிகளுக்கு ஆலோசைனைகள் வழங்கப்பட்டன.

வட்டார மருத்துவா் வளா்மதி, குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் தெரசா, சுகாதார ஆய்வாளா் ராமன், செவிலியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com