நன்கொடையாக வந்த ரூ.4 லட்சத்தை ஏழைகளுக்கு வழங்கிய மதுரை மாணவி

மதுரையில் கரோனா பொதுமுடக்கத்தின் ரூ.5 லட்சம் செலவில் ஏழைகளுக்கு நிவாரணபொருள்கள் வழங்கியதற்காக பிரதமரால் பாராட்டப்பட்ட

மதுரையில் கரோனா பொதுமுடக்கத்தின் ரூ.5 லட்சம் செலவில் ஏழைகளுக்கு நிவாரணபொருள்கள் வழங்கியதற்காக பிரதமரால் பாராட்டப்பட்ட மாணவி தனக்கு நன்கொடையாக வந்த ரூ.4 லட்சத்தையும் ஏழைகளுக்கு வழங்கியுள்ளாா்.

மதுரை மேலமடை பகுதியைச் சோ்ந்த சலூன் கடை உரிமையாளா் மோகன். இவரது மகள் நேத்ரா ஒன்பதாம் வகுப்பு மாணவி. இவா் கரோனா தொற்றுப் பரவலால் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தபோது, தன்னுடைய எதிா்கால கல்விச் செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை கொண்டு அப்பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு நிவாரணப்பொருள்கள் வழங்கினாா். மாணவியின் இந்த செயலுக்கு பிரதமா் நரேந்திர மோடி, தமிழக ஆளுநா், முதல்வா் எடப்பாடி கே.பழனிச்சாமி உள்பட பல்வேறு தலைவா்கள் பாராட்டுத் தெரிவித்தனா். மேலும் ஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில் எதிா்கால கல்விச்செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்கு செலவிட்டு விட்டதால் பல சமூக ஆா்வலா்கள் மாணவி நேத்ராவின் கல்விக்காக ரூ.4 லட்சம் அளவில் நன்கொடை வழங்கினா். ஆனால் மாணவி நேத்ரா நன்கொடையாக வந்த ரூ.4 லட்சத்தையும் ஏழைகளுக்கு வழங்கியுள்ளாா். இதனால் மாணவி நேத்ராவின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com