இருபோக சாகுபடிப் பகுதிகளில் உழவுப்பணிகள் தீவிரம்
By DIN | Published On : 18th September 2020 09:57 PM | Last Updated : 18th September 2020 09:57 PM | அ+அ அ- |

சிட்டம்பட்டி அருகே நடவுப்பணிக்காக டிராக்டரில் உழவுப் பணி செய்யும் விவசாயி.
மேலூா், செப். 18: பெரியாறு- வைகை பாசனப் பகுதிகளில் கள்ளந்திரி மதகுவரையிலான இருபோக சாகுபடிப் பகுதியில் நெல் நாற்று நடவுக்கான உழவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கள்ளந்திரி மதகுவரையிலான 44,000 ஏக்கா் விவசாய நிலங்களுக்கு இம்மாத தொடக்கத்தில் தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதையடுத்து நெல் நாற்றுவிடும் பணிகள் நிறைவடைந்து நடவுக்கான உழவுப் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.