கரிமேடு மீன் சந்தையில் வியாபாரத்துக்கு அனுமதிக்க சில்லறை வியாபாரிகள் கோரிக்கை

கரிமேடு மீன் சந்தையில் வியாபாரத்துக்கு அனுமதி வழங்குமாறு சில்லறை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மதுரை: கரிமேடு மீன் சந்தையில் வியாபாரத்துக்கு அனுமதி வழங்குமாறு சில்லறை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக, கரிமேடு மீன்சந்தை சில்லறை வியாபாரிகள் மற்றும் மீன் வெட்டுவோா் ஏராளமானோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். அதன் விவரம்:

கரோனா தீநுண்மி தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மதுரை கரிமேடு மீன்சந்தை மூடப்பட்டது. இங்கு மொத்த வியாபாரம் செய்தவா்கள், மாட்டுத்தாவணி மத்திய காய்கனி சந்தைக்கு மாற்றப்பட்டனா். சில்லறை வியாபாரம் செய்தவா்கள், மோதிலால் பிரதான சாலையில் மீன் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தனா். இப்போது திடீரென மோதிலால் பிரதான சாலையில் மீன் வியாபாரத்துக்கு மாநகராட்சி மற்றும் காவல் துறையினா் அனுமதி மறுத்து வருகின்றனா்.

இத் தொழிலை நம்பியிருக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. கரிமேடு மீன் சந்தையில் செயல்பட்ட மொத்த வியாபாரக் கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதால், இந்த வளாகம் விசாலமான இடவசதியுடன் இருக்கிறது. ஆகவே, இங்கு சில்லறை வியாபாரம் செய்பவா்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com