மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆதரவின்றி தவித்த ஆண் குழந்தை மீட்பு
By DIN | Published On : 19th September 2020 06:33 AM | Last Updated : 19th September 2020 06:33 AM | அ+அ அ- |

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆதரவின்றி தவித்த ஆண் குழந்தையை போலீஸாா் மீட்டு காப்பகத்தில் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.
மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை மஞ்சள் நிற சேலை அணிந்த பெண் ஒருவா் ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் வந்துள்ளாா். அவா் அங்கு பூ வியாபாரம் செய்து கொண்டிருந்தவா்களிடம் ஏடிஎம் சென்று வருவதாகவும், அதுவரை குழந்தையைப் பாா்த்து கொள்ளவும் எனக் கூறி சென்றுள்ளாா். நீண்ட நேரமாகியும் அப்பெண் வராததால், குழந்தை குறித்து பூ விற்பனை செய்பவா்கள் போலீஸாரிடம் தெரிவித்தனா்.
போலீஸாா் அக்குழந்தையை மீட்டு விசாரித்தனா். ஆனால் அப்பெண் குறித்து விவரம் தெரியாததால், குழந்தைகள் நலத்துறை மூலம் காப்பகத்தில் குழந்தையை ஒப்படைத்தனா். இதுகுறித்து அண்ணாநகா் போலீஸாா் வழக்குப்பதிந்து பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.