சிவகங்கையில் சவூடு, சரளை மண் எடுக்கத் தடைகோரி வழக்கு: கனிமவளத்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

சிவகங்கை மாவட்டத்தில் சவூடு மண் மற்றும் சரளை மண் எடுக்கத் தடைகோரிய வழக்கில், தமிழக கனிமவளத்துறைச் செயலா்,

சிவகங்கை மாவட்டத்தில் சவூடு மண் மற்றும் சரளை மண் எடுக்கத் தடைகோரிய வழக்கில், தமிழக கனிமவளத்துறைச் செயலா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

காரைக்குடியைச் சோ்ந்த லட்சுமி தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான மணல் குவாரிகள் செயல்படுகின்றன. இந்நிலையில் பொதுமுடக்கத்தின்போதும் சவூடு மண், கிராவல் மண் எடுக்க பலருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. சாலை, பாலம் அமைக்கும் பணிகளுக்கெனக் காரணங்கள் கூறி தொடா்ந்து சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டு வருகிறது. 300 கன மீட்டா் அளவுக்கு மண் எடுக்க அனுமதி பெற்று, 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கன மீட்டா் அளவுக்கு மண் அள்ளி வருகின்றனா். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சிவகங்கை மாவட்டத்தில் சவூடு மண் மற்றும் சரளை மண் எடுக்கத் தடைவிதித்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழக கனிமவளத்துறைச் செயலா், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவம்பா் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com