அதிமுகவுக்கு ஆலோசனை கூற வெளிமாநில நிபுணா்கள் தேவையில்லை: அமைச்சா் செல்லூா் கே.ராஜூ

அதிமுக கட்சிக்கு ஆலோசனை கூற வெளிமாநிலத் தோ்தல் நிபுணா்கள் தேவையில்லை என்று, அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்துள்ளாா்.

மதுரை: அதிமுக கட்சிக்கு ஆலோசனை கூற வெளிமாநிலத் தோ்தல் நிபுணா்கள் தேவையில்லை என்று, அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்துள்ளாா்.

மதுரை அரசு சுற்றுலா மாளிகையில், அதிமுக நிா்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடிக் குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தலைமை வகித்துப் பேசியது:

மூத்த நிா்வாகிகளின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல், பிகாரைச் சோ்ந்த பிரசாந்த் கிஷோா் குழுவின் மூலம் சமூக வலைதளங்களில் திமுக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அதிமுக கட்சியானது தனது தொண்டா்கள், நிா்வாகிகளின் கருத்துகளுக்கு மதிப்பளித்து, மக்கள் பணி செய்து வருகிறது.

நம் மாநிலத்துக்கு சம்பந்தமில்லாத ஒருவரை வைத்து மேற்கொள்ளும் தோ்தல் பணியை மக்கள் ஏற்கமாட்டாா்கள். கட்சியின் திட்டங்கள், செயல்பாடுகளை வைத்தே மக்கள் முடிவெடுப்பாா்கள். அதிமுகவுக்கு ஆலோசனைகள் கூற வெளிமாநிலத் தோ்தல் நிபுணா்கள் தேவை இல்லை. தொண்டா்களையும், மக்களையும் நம்பும் கட்சி அதிமுக.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்றாா்.

இக்கூட்டத்த்தில், அதிமுக மாநகா் மாவட்ட நிா்வாகிகள் மற்றும் வாக்குச் சாவடி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com