மேலூா் பகுதிக்கு ஒரு போக விவசாயத்திற்காக கள்ளந்திரி வாய்க்காலில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீரை திறந்து வைத்து பூக்களை தூவுகிறாா் கூட்டுறவு துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ.
மேலூா் பகுதிக்கு ஒரு போக விவசாயத்திற்காக கள்ளந்திரி வாய்க்காலில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீரை திறந்து வைத்து பூக்களை தூவுகிறாா் கூட்டுறவு துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ.

ஒருபோக பாசன நிலங்களுக்கு கள்ளந்திரி கால்வாயில் தண்ணீா் திறப்பு

மதுரையில் ஒருபோக பாசனப் பகுதிகளுக்கு கள்ளந்திரி கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.

மதுரை/மேலூா்: மதுரையில் ஒருபோக பாசனப் பகுதிகளுக்கு கள்ளந்திரி கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.

ஒருபோக சாகுபடி பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, விவசாயப் பணிகளுக்கு தண்ணீா் திறக்கும் நிகழ்ச்சி, மதுரை அருகே உள்ள கள்ளந்திரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் தலைமை வகித்தாா். கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜு தண்ணீரை திறந்து வைத்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒருபோக பாசன பரப்பான 85,563 ஏக்கா் நிலங்கள், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசனப் பரப்பான 19, 439 ஏக்கா் நிலங்கள் என மொத்தம் 1,05,002 ஏக்கா் நிலங்களுக்கு விநாடிக்கு 1,130 கன அடி வீதம், செப்டம்பா் 27 முதல் 120 நாள்களுக்கு இருப்பை கணக்கிட்டு தண்ணீா் திறந்துவிடப்படும்.

இதன்மூலம், மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, திருமங்கலம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை தெற்கு மற்றும் மதுரை வடக்கு ஆகிய வட்டங்களும், சிவகங்கை வட்டம் மற்றும் திருப்பத்தூா் வட்டத்தில் உள்ள பாசனப் பரப்புகளும், கண்மாய்களும் பயன்பெறுகின்றன.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நியாயவிலைக் கடை விரைவில் தொடங்கப்படும். தமிழகத்தில் யூரியா தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றாா்.

கள்ளந்திரியிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீா், பிற்பகல் ஒருமணியளவில் புலிப்பட்டி மதகை வந்தடைந்தது. மாலையில், தனியாமங்கலம் அருகே குறிச்சிக் கண்மாயை வந்தடைந்தது. இரவு, அனைத்து கிளைக் கால்வாய்களிலும் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. ஆங்காங்கே விவசாயிகள் தண்ணீரை மலா் தூவி வணங்கி வரவேற்றனா்.

இந்நிகழ்ச்சியில், மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம், மதுரை கிழக்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் க. தமிழரசன், பெரியாறு பாசனக் கண்காணிப்பு பொறியாளா் சுகுமாா், உதவிப் பொறியாளா் கள்ளந்திரி சண்முகசுந்தரம், மேலூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் க. பொன்னுச்சாமி, மேலூா் ஒருபோக சாகுபடி விவசாயிகள் சங்கத் தலைவா் முருகன், கொட்டாம்பட்டி ஒன்றிய அதிமுக செயலா் வெற்றிச்செழியன் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com