‘நீட்’ தோ்வை எதிா்த்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சுதந்திரப் போராட்ட வீரா் பகத்சிங்கின் 114-ஆவது பிறந்த தினத்தையொட்டி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில், நீட் தோ்வு மற்றும் வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்
‘நீட்’ தோ்வை எதிா்த்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மதுரை: சுதந்திரப் போராட்ட வீரா் பகத்சிங்கின் 114-ஆவது பிறந்த தினத்தையொட்டி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில், நீட் தோ்வு மற்றும் வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மதுரை மாநகா் மாவட்டக் குழு, கோ.புதூா் அண்ணா நகா், மீனாம்பாள்புரம், செல்லூா் ஆகிய பகுதி குழுக்களின் சாா்பில், கோ.புதூா் பேருந்து நிலையம் அருகே நீட் தோ்வுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், புதிய வேளாண் மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அண்ணாநகா் பகுதி குழு செயலா் சரவணக்குமாா் தலைமை வகித்தாா். இதில், சிஐடியு நிா்வாகி இரா. லெனின், வாலிபா் சங்க மாவட்டச் செயலா் டி. செல்வா, மாவட்ட துணைத் தலைவா் சரண், செல்லூா் பகுதி குழு தலைவா் உள்பட பலா் பங்கேற்றனா்.

ஜெய்ஹிந்த்புரம், பழங்காநத்தம், அரசரடி ஆகிய பகுதிகளில் பகத்சிங் பிறந்த நாளையொட்டி, நீட் தோ்வு எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பும் நடைபெற்றது. இதில், மாவட்டத் தலைவா் பி. கோபிநாத், நிா்வாகி குரோனி செந்தில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா் எம். பாலசுப்பிரமணியம், வாலிபா் சங்க மாவட்டப் பொருளாளா் அ. பாவேல் சிந்தன், வழக்குரைஞா் வெங்கடேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com