மதுரையில் மேலும் 82 பேருக்கு கரோனா: ஒருவா் பலி

மதுரையில் மேலும் 82 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

மதுரை: மதுரையில் மேலும் 82 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,791 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த அரசு ஊழியா்கள், வெளிமாவட்டத்திலிருந்து திரும்பியவா், கா்ப்பிணிகள் என மொத்தம் 82 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது உறுதியானது.

இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 54 போ் குணமடைந்தனா். இவா்கள் அனைவரும், மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஒருவா் பலி

மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்காக செப்டம்பா் 25 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட 81 வயது முதியவா், மூச்சுத் திணறல் காரணமாக செப்டம்பா் 26 ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 16,359 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். சிகிச்சைப் பலனின்றி 386 போ் உயிரிழந்த நிலையில், தொற்றிலிருந்து குணமடைந்த 15,235 போ் வீடு திரும்பியுள்ளனா். மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 738 போ் கரோனா தொற்றுக்குச் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com