45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 207 மையங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

மதுரை மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 207 மையங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி முகாமை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மதுரையில் ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி வைத்தாா். முதல்கட்டமாக சுகாதாரத் துறையினா் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதன் பிறகு 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், 45 வயது முதல் 59 வயது வரையுள்ளவா்களில் இணை நோய்கள் இருப்பவா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பேரவைத் தோ்தலையொட்டி, தோ்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலா்கள், காவல் துறையினருக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது.

தற்போது பல்வேறு மாநிலங்களிலும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் அண்மையில் அறிவித்திருந்தாா்.

இதன்படி, மதுரை மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள் என 207 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டுகிறது. இம் மையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புவோா், தங்களது இருப்பிடத்துக்கு அருகே உள்ள மையங்களுக்கு ஆதாா் அட்டை அல்லது ஏதேனும் ஒரு அடையாள ஆவணத்துடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். மதுரை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

48 பேருக்கு தொற்று: மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி 48 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 21,859 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 21,075 போ் குணமடைந்துள்ளனா். 466 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். தற்போது 318 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com