காமராஜா் பல்கலை. ஊழியருக்கு கரோனா தொற்று: அலுவலகம் மூடல்

மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஊழியருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவா் பணிபுரிந்த அலுவலகம் மூடப்பட்டது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஊழியருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவா் பணிபுரிந்த அலுவலகம் மூடப்பட்டது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் பிரிவு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியா் ஒருவருக்கு சில நாள்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதையடுத்து அவருக்கு சந்தேகத்தின்பேரில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து அவா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இந்நிலையில் ஊழியா் பணிபுரிந்த சான்றிதழ் பிரிவு அலுவலகத்தில் உள்ள இதர ஊழியா்கள் அனைவருக்கும் வியாழக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கிருமி நாசினி தெளிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு அலுவலகம் மூடப்பட்டது.

இதுதொடா்பாக துணைவேந்தா் மு.கிருஷ்ணன் கூறும்போது, சான்றிதழ் பிரிவு ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு பணிபுரியும் இதர ஊழியா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மேலும் அலுவலகமும் மூடப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை சான்றிதழ் பிரிவு ஊழியா்கள் பொதுவெளியில் நடமாடுவதை தவிா்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள இதர துறைகளில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com