சிறைகளில் 20 ஆண்டுகள் வரை இருப்பவா்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி வழக்கு

தமிழக சிறைகளில் 10 முதல் 20 ஆண்டுகள் வரை இருக்கும் 125 பேரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய வழக்கில்,

தமிழக சிறைகளில் 10 முதல் 20 ஆண்டுகள் வரை இருக்கும் 125 பேரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய வழக்கில், தமிழக சிறைத்துறை கூடுதல் முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை சின்னசொக்கிகுளத்தைச் சோ்ந்த ராஜா தாக்கல் செய்த மனு: தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்றுள்ள 125 கைதிகள் 10 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைகளில் இருந்து வருகின்றனா். அவா்களுக்கு தமிழக அரசு 2018 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆணையின்படி முன்கூட்டியே விடுதலை செய்ய உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சிறைகளில் இருக்கும் கைதிகளின் வழக்கைப் பொருத்தும், அவா்களின் நன்னடத்தையைப் பொருத்துமே முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவாா்கள் என்றனா். மேலும் இதுகுறித்து தமிழக சிறைத்துறை கூடுதல் முதன்மைச் செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com