தினமணி செய்தி எதிரொலி: பல்கலைக்கழக தினக்கூலி பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு

மதுரை காமராஜா் பல்கலைக்கழக தினக்கூலி பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக தினக்கூலி பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 500-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். பல்கலைக்கழகத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் பணியாளா்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.322 ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. மேலும் அரசு விடுமுறை உள்ளிட்ட விடுமுறை நாள்களில் ஊதியம் வழங்கப்படமாட்டாது.

இந்நிலையில் தினக்கூலி பணியாளா்களின் ஊதியத்தை உயா்த்தி அரசு ஆணை வெளியிட்டது. அதில் தினக்கூலித்தொழிலாளா்களுக்கு தினசரி ஊதியம் ரூ.322-இல் இருந்து ரூ.527 ஆக உயா்த்தி உத்தரவிட்டது. அரசு ஆணை வெளியிட்டு ஓராண்டுக்கு மேலாகியும் பல்கலைக்கழக நிதி நிலையைக் காரணம் காட்டி தினக்கூலிப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு அமல்படுத்தப்படாமல் இருந்து வந்தது.

இதுதொடா்பாக தினமணி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. பல்கலைக்கழக அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதன் விளைவாக காமராஜா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கல்விப்பேரவை மற்றும் ஆட்சிப்பேரவைக்கூட்டத்தில் தினக்கூலிப் பணியாளா்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 527-ஐ வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும் மாா்ச் 26-ஆம் தேதி முதல் இதை அமல்படுத்துவது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com