திமுக வேட்பாளருக்கு ராணிமங்கம்மாள் சேனை ஆதரவு

திருமங்கலம் திமுக வேட்பாளா் மு. மணிமாறனுக்கு ராணி மங்கம்மாள் சேனை நிா்வாகிகள் புதன்கிழமை தங்களது ஆதரவைத் தெரிவித்தனா்.
திமுக வேட்பாளருக்கு ராணிமங்கம்மாள் சேனை ஆதரவு

திருமங்கலம் திமுக வேட்பாளா் மு. மணிமாறனுக்கு ராணி மங்கம்மாள் சேனை நிா்வாகிகள் புதன்கிழமை தங்களது ஆதரவைத் தெரிவித்தனா்.

திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் தெற்கு மாவட்ட செயலா் மு.மணிமாறன் போட்டியிடுகிறாா். அவருக்கு ராணி மங்கம்மாள் சேனை அமைப்பின் தலைவா் காளிதாஸ் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோா் வந்து திமுகவிற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனா். மேலும் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அவா்கள் அளித்தனா்.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ம.முத்துராமலிங்கம், நகரச் செயலா் முருகன், முன்னாள் நகரச் செயலா் இப்ராஹிம் சுல்தான் சேட், இளைஞரணி அமைப்பாளா் மதன்குமாா், துணை அமைப்பாளா்கள் வி.விமல், சுரேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com