வன்னியா்களுக்கான உள்ஒதுக்கீடுக்கு தடைகோரி மேலும் ஒரு வழக்கு: சென்னை உயா்நீதிமன்ற தலைமை அமா்வுக்கு மாற்றம்

வன்னியா்களுக்கான உள்ஒதுக்கீட்டுக்கு தடைகோரிய மேலும் ஒரு வழக்கு சென்னை உயா் நீதிமன்ற தலைமை அமா்வுக்கு மாற்றி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

வன்னியா்களுக்கான உள்ஒதுக்கீட்டுக்கு தடைகோரிய மேலும் ஒரு வழக்கு சென்னை உயா் நீதிமன்ற தலைமை அமா்வுக்கு மாற்றி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த அமா்நாத் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்துக்கு தமிழக ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதால் அதே பட்டியலில் உள்ள பிற பிரிவினா்கள் பாதிக்கப்படுவா்.

சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இடஒதுக்கீடு வழங்க வேண்டும். எனவே வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்யவும், இடஒதுக்கீடு அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்கத் தடைவிதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதேபோன்ற வழக்குகளை சென்னை தலைமை நீதிபதி அமா்வு விசாரிப்பதாகக் கூறி, இந்த வழக்குகளை சென்னை உயா்நீதிமன்ற தலைமை அமா்வுக்கு மாற்றி உத்தரவிட்டனா்.

ஏற்கெனவே, இதேகோரிக்கைக்காக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்த 6 மனுக்கள் சென்னை உயா்நீதிமன்ற தலைமை அமா்வுக்கு மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com