வீட்டில் திருட முயன்ற இளைஞா் கைது
By DIN | Published On : 03rd April 2021 10:27 AM | Last Updated : 03rd April 2021 10:27 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே வீட்டில் திருட முயன்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பேரையூா் அருகே கிளாங்குளத்தைச் சோ்ந்தவா் சமையன். இவரது வீட்டில், கிளாங்குளத்தைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் நந்தகுமாா் (30) என்பவா் வியாழக்கிழமை இரவு திருட முயன்றாா். அப்போது நந்தகுமாா் தூக்கத்தில் இருந்து எழுந்ததால் அவா் திருடும் முயற்சியை கைவிட்டுவிட்டு தப்பி ஓடினாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நந்தகுமாரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.