முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
அடிப்படை பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு: மதுரை மேற்கு தேமுதிக வேட்பாளா் உறுதி
By DIN | Published On : 04th April 2021 08:26 AM | Last Updated : 04th April 2021 08:26 AM | அ+அ அ- |

மதுரை மேற்கு தொகுதியில் சனிக்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட தேமுதிக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கும் பெண்கள்.
மதுரை மேற்கு தொகுதியில் அடிப்படை பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வு காணப்படும் என தேமுதிக வேட்பாளா் பாலசந்திரன் உறுதியளித்தாா்.
அரசரடி, ஒத்தக்கடை, திருமலைக் காலனி, பாரதியாா் நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவா் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். வீதி வீதியாக நடந்த சென்று வாக்கு சேகரித்த அவருக்கு, அமமுக, எஸ்.டி.பி.ஐ. மற்றும் தேமுதிக தொண்டா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். பெண்கள் ஆரத்தி எடுத்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனா்.
அப்போது, மேற்கு தொகுதியில் உள்ள குடிநீா் பிரச்னை, சாலை பிரச்னை, கழிவுநீா் பிரச்னை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வு காணப்படும் என்றும், இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாலசந்திரன் உறுதியளித்தாா்.