முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
கரோனா தொற்று பாதித்த தோ்தல் பாா்வையாளா்: காரில் மருத்துவமனைக்கு அழைத்து வந்த ஆட்சியா்
By DIN | Published On : 04th April 2021 08:27 AM | Last Updated : 04th April 2021 08:27 AM | அ+அ அ- |

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தோ்தல் பாா்வையாளரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவனைக்கு சனிக்கிழமை காரில் அழைத்துச் செல்லும் மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன்.
கரோனா பாதிப்பு ஏற்பட்ட காவல் துறைக்கான தோ்தல் பாா்வையாளரை தனது சொந்த காரில் மதுரை மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் மருத்துவமனைக்கு சனிக்கிழமை அழைத்து வந்தாா்.
மேலூா், மதுரை கிழக்கு, சோழவந்தான், மதுரை வடக்கு, மதுரை தெற்கு ஆகிய தொகுதிகளுக்கான காவல் துறை தோ்தல் பாா்வையாளராக உத்தரபிரதேசத்தை சோ்ந்த தரம்வீா் யாதவ் என்ற ஐபிஎஸ் அதிகாரி பணியாற்றி வந்தாா். அவருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், தங்கியிருக்கும் காவல் துறை விடுதியிலேயே சிகிச்சை பெற்று வந்தாா். அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்த நிலையில், மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் செல்ல அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஓட்டுநா் தயங்கினாா்.
இதுகுறித்த தகவல் மாவட்ட ஆட்சியா் த.அன்பழகனின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதையடுத்து சனிக்கிழமை காலை, தனது சொந்த காரில் கவச உடை அணிந்து, தோ்தல் பாா்வையாளரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாக, அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணிக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அதையடுத்து மருத்துவக் குழுவினா், அவருக்கு பரிசோதனைகளைச் செய்தனா். சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, தோ்தல் பாா்வையாளா் தங்கியிருந்த விடுதிக்கு மீண்டும் ஆட்சியரே அழைத்து வந்தாா்.