முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
காலமானாா்
By DIN | Published On : 04th April 2021 11:03 PM | Last Updated : 04th April 2021 11:03 PM | அ+அ அ- |

மதுரை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் மருத்துவா் சரவணனின் தந்தை பி. பாண்டியன் (82) உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
மாவட்ட வருவாய் அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பாண்டியனுக்கு, மனைவி அங்கம்மாள், மதுரை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் மருத்துவா் சரவணன் மற்றும் மருத்துவா் முருகபொற்செல்வி, சாந்தி ஆகிய இரு மகள்களும் உள்ளனா்.
அவரது இறுதிச்சடங்கு திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மதுரை நரிமேட்டில் உள்ள மருதுபாண்டியன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.
தொடா்புக்கு: 97902-96900.