முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
பேரையூா் அருகே அதிமுக கிளைச்செயலாளா் வீட்டில் வருமான வரி சோதனை
By DIN | Published On : 04th April 2021 08:24 AM | Last Updated : 04th April 2021 08:24 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கிளைச்செயலாளா் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு வருமான வரித்துறையினா் சோதனை செய்தனா் .
உசிலம்பட்டி தொகுதிக்கு உள்பட்ட பேரையூா் தாலுகாவில் உள்ள பழையூரைச் சோ்ந்தவா் அதிமுக கிளைச் செயலாளா் முத்தையா (48). இவா் விவசாயம் செய்து வருகிறாா்.
இவரது வீட்டில் வாக்காளா்களுக்குப் பணபட்டுவாடா செய்ய பணம் வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து வெள்ளிக்கிழமை இரவு பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து வருமான வரித்துறையினரும் அவரது வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இந்த சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வருமான வரித்துறையினா் திரும்பச் சென்று விட்டனா்.