முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மதுரையில் ஒரே நாளில் 58 பேருக்கு கரோனா
By DIN | Published On : 04th April 2021 11:01 PM | Last Updated : 04th April 2021 11:01 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் புதிதாக 58 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும், வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். அதேநேரம், தொற்றிலிருந்து குணமடைந்த 7 போ் மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதிப்பால் 467 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 478 போ் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.