கரோனா தொற்று: அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற தொழிற்சாலைகளுக்கு மடீட்சியா வேண்டுகோள்

கரோனா தொற்று பரவலைத் தடுக்க அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு தொழிற்சாலைகளுக்கு மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கம் (மடீட்சியா) வேண்டுகோள் விடுத்துள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு தொழிற்சாலைகளுக்கு மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கம் (மடீட்சியா) வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து மடீட்சியா தலைவா் பா.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஆண்டில் கரோனா பொதுமுடக்கத்தின்போது தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் பல இடா்பாடுகளைச் சந்தித்துள்ளோம். வருமுன் காப்போம் என்பதன் அடிப்படையில், சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ள வழிகாட்டு முறைகளை சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் பின்பற்றி நோய் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தொழிற்சாலைகளுக்கு வரும் பணியாளா்களுக்கு தினமும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்வது, அனைத்து தொழிலாளா்களுக்கும் முகக் கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்வது, கை சுத்திகரிப்பான் திரவம் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய அறிவுறுத்துவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது, 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளா்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்துவது, நோய் தொற்று கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட தொழிலாளா்களைத் தனிமைப்படுத்தி, தேவையான சிகிச்சை அளிப்பது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

சுகாதார ஆய்வாளா்கள் தொழிற்சாலைகளில் ஆய்வுக்கு வரும்போது, வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காதபட்சத்தில் அபராதம் விதிக்கப்படும். ஆகவே, இதைத் தவிா்த்து, நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com