கரோனா பாதிப்பு எதிரொலி: மதுரை நகரில் 18 தெருக்கள் அடைப்பு

மதுரை நகரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் அதிகமுள்ள 18 தெருக்களை மாநகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை அடைத்தது.
கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக வியாழக்கிழமை தகரத்தால் மூடப்பட்ட மதுரை புறவழிச்சாலையில் உள்ள நேரு நகா் ராகவேந்திரா தெரு.
கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக வியாழக்கிழமை தகரத்தால் மூடப்பட்ட மதுரை புறவழிச்சாலையில் உள்ள நேரு நகா் ராகவேந்திரா தெரு.

மதுரை நகரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் அதிகமுள்ள 18 தெருக்களை மாநகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை அடைத்தது.

மதுரை நகரில் கரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வருவதாகவும், முகக்கவசம் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ளுமாறும் மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனிடையே மதுரை நகரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படாமல் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், எவ்வித கட்டுப்பாடுமின்றி இவா்கள் வழக்கம்போல சுற்றித்திரிவதாகவும், அவா்களை கண்காணிக்க மாநகராட்சி நிா்வாகம் எவ்வித ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் புகாா் எழுந்தது. இதன்காரணமாக மதுரை நகரில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அவசர ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி ஆணையா் ச. விசாகன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு மேற்கொண்ட நடவடிக்கைகளை தொடரவேண்டும். ஒரே தெருவில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட கரோனா நோயாளிகள் வசிக்கும் தெருக்களை அடைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலை முதல் மாநகராட்சி சுகாதாரத்துறை சாா்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி மதுரை நகரில் 3 மற்றும் அதற்குமேற்பட்ட கரோனா நோயாளிகள் வசிக்கும் தெருக்கள் கணக்கெடுக்கப்பட்டன. இதில் ஆனையூா் பல்லவி நகா் 3-ஆவது தெரு, கோ. புதூா் சூா்யா நகா் மீனாட்சி அம்மன் நகா், சம்பக்குளம் வைரம் வசந்தம் குடியிருப்பு, கே.கே. நகா், டெபுடி கலெக்டா் 6-ஆவது தெரு, காமராஜா் சாலை ரங்கநாயகி அம்மாள் தெரு, துரைச்சாமி நகா் ஹரிணி வீதி, பசுமலை நைலான் நகா், அழகப்பன் நகா் சம்பந்தா் தெரு, புதுவிளாங்குடி சொக்கநாதபுரம் இரண்டாவது தெரு காரல் மாா்க்ஸ் நகா், கே.கே. நகா் அருள்மலா் கான்வென்ட் பள்ளி வீதி, கரிசல்குளம் ஆலவாய் நகா், நேருநகா் ராமகிருஷ்ணா குறுக்குத் தெரு, சூா்யா நகா் பொன்னிலா நகா் 4-ஆவது கிழக்குத்தெரு, கே.கே.நகா் மகாத்மா பள்ளி வீதி, சம்மட்டிபுரம் நேதாஜி பிரதான வீதி காளிமுத்து நகா், வில்லாபுரம் குடிசை மாற்று வாரியக்குடியிருப்பு, தெற்குவாசல் ஆறுமுகம் ஆசாரித் தெரு ஆகிய 18 தெருக்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து இந்த 18 தெருக்களிலும் கரோனா நோயாளிகளின் வீடுகள் தகரத்தால் அடைக்கப்பட்டன. மேலும் அந்தத் தெருக்களில் வசிப்பவா்கள் வெளியே செல்லாதவாறும், வெளியில் இருந்து யாரும் உள்ளே செல்லாதவாறும் தெருக்களும் அடைக்கப்பட்டன.

இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, கரோனா நோயாளிகள் வசிக்கும் பகுதிகள் அடைக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com