பாத்திமா மகளிா் கல்லூரி ஆண்டு விழா

மதுரை பாத்திமா மகளிா் கல்லூரியின் 68-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை பாத்திமா மகளிா் கல்லூரியின் 68-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியில் இணைய வழியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரிச் செயலா் எம்.பிரான்சிஸ்கா புளோரா, கல்லூரி முதல்வா் ஜி.செலின் சகாயமேரி தலைமை வகித்தனா். மதுரை காமராஜா் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) வி.எஸ். வசந்தா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று “உலகளவில் அறிவியல் தொழில்நுட்பத்தில் பெண் விஞ்ஞானிகளின் பங்கு” என்ற தலைப்பில் பேசும்போது, மேடம் கியூரி மற்றும் கமலா ஜோஸ் சகோனி ஆகிய பெண்களை மாணவியா் உதாரணமாகக் கொண்டு செயல்பட வேண்டும்.

சமூகத்தை முன்னேற்றுவதற்கு பெண்களுக்குக் கல்வி அவசியம். இந்தியாவில் கல்வியறிவு பெற்ற பெண்களின் விகிதம் 53.67 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. இதனை நூறு சதவிகிதமாக மாற்ற வேண்டியது பெண்களாகிய நமது கடமை என்றாா். இதைத்தொடா்ந்து பாத்திமா கல்லூரியின் முன்னாள் மாணவியும், சிங்கப்பூரின் மிக உயரிய சமூக சேவைக்கான விருதுபெற்ற விஜயலெட்சுமியை பாராட்டி விருது வழங்கப்பட்டது. வேதியியல் துறை உதவிப் பேராசிரியை அ. ராஜேஸ்வரி நன்றியுரை கூறினாா். விழா ஏற்பாடுகளை வேதியியல் துறைப் பேராசிரியை அ. ராஜேஸ்வரி மற்றும் தகவல்தொடா்பியல் துறைத்தலைவா் மகேஸ்வரி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com