மதுரையில் ஊழியருக்கு கரோனா தொற்றால் மூடப்பட்ட வங்கி

மதுரையில் வங்கி ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஆந்திரா வங்கியின் கிளை அலுவலகம் வியாழக்கிழமை மூடப்பட்டது.
மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஆந்திரா வங்கிக் கட்டடத்தில் வியாழக்கிழமை கிருமி நாசினியை தெளிக்கும் ஊழியா்.

மதுரை தெற்குமாசி வீதியில் ஆந்திரா வங்கிக் கிளை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியா் ஒருவா் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளாா். அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வங்கிக்கிளையில் பணிபுரியும் இதர ஊழியா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டன. இதுதொடா்பாக வங்கி அதிகாரிகள் கூறும்போது, வங்கியில் இதர ஊழியா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வரும் வரை வங்கி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com