மாட்டுத்தாவணி, பரவை காய்கனி சந்தைகளில் சில்லறை வியாபாரக் கடைகளுக்குத் தடை: ஆட்சியா் உத்தரவு

மதுரை மாட்டுத்தாவணி, பரவை காய்கனி சந்தைகளில் சில்லறை வியாபாரக் கடைகளுக்குத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் உத்தரவிட்டுள்ளாா்.

மதுரை மாட்டுத்தாவணி, பரவை காய்கனி சந்தைகளில் சில்லறை வியாபாரக் கடைகளுக்குத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி:

மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலை வீசுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவ நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் என்பதால், பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிவது, அடிக்கடி கைகளைக் கழுவுவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கூட்டமான இடங்களுக்குச் செல்லாமல் தவிா்ப்பது ஆகிய நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.

அதோடு, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளில் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதன்படி, பரவை மற்றும் மாட்டுத்தாவணி மொத்த காய்கனி சந்தை வளாகத்தில் செயல்படும் சில்லறை வியாபாரக் கடைகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள், தனியாா் நிறுவனங்கள், உணவு விடுதிகளில் பணிபுரியும் அலுவலா்கள், பொதுமக்கள் முகக் கவசம் அணியாதவா்களை அனுமதிக்கக் கூடாது. அனைத்துக் கடைகள், உணவகங்கள் 50 சதவீத வாடிக்கையாளா்களுடன் இரவு 11 மணி வரை அனுமதிக்கப்படுவா்.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுவா். இருப்பினும் திருவிழாக்கள், மதம் சாா்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. இதற்கு முன்பு 2020 ஜூலை 1 முதல் அனுமதிக்கப்பட்டவாறு வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநா் தவிா்த்து 3 பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநா் தவிா்த்து 2 பயணிகளும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவா். இக் கட்டுப்பாடு கடுமையாக அமல்படுத்தப்படும். பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com