மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் திறப்பு: ரூ.62.69 லட்சம் காணிக்கை வசூல்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.62.69 லட்சம் வசூலாகியுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.62.69 லட்சம் வசூலாகியுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மற்றும் உபகோயில்களின் உண்டியல்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்நிலையில் மீனாட்சி சுந்தரேசுவரா் மற்றும் 11 உபகோயில்களின் உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டன. உண்டியல் திறப்பின்போது, மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் உதவி ஆணையா் ஜி.செல்வி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தக்காா் பிரதிநிதி, கோயில் கண்காணிப்பாளா்கள், மதுரை இந்து சமய அறநிலையத்துறை தெற்கு, வடக்கு சரக ஆய்வா்கள், கோயில் அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் வங்கிப்பணியாளா்கள் பங்கேற்றனா்.

உண்டியல்களில் பக்தா்கள் காணிக்கையாக ரூ. 62,69,273 கிடைத்தது. மேலும் பலமாற்று பொன் இனங்கள் 590 கிராம், வெள்ளி 700 கிராம், அயல்நாட்டு நோட்டுகள் 12-ம் வரப்பெற்றுள்ளன என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com