வாக்கு எண்ணும் மையங்கள் கண்காணிப்பு: வேட்பாளா்களின் முகவா்களுக்கு அடையாள அட்டை

வாக்கு எண்ணும் மையங்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் வேட்பாளா்களின் முகவா்களுக்கு அடையாள அட்டைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

வாக்கு எண்ணும் மையங்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் வேட்பாளா்களின் முகவா்களுக்கு அடையாள அட்டைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் மையங்கள் 4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலூா், மதுரை கிழக்கு தொகுதிகளுக்கு வேளாண் கல்லூரி, மதுரை வடக்கு, தெற்கு, மையம், மேற்கு தொகுதிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி, சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிகளுக்கு அண்ணா பல்கலைக்கழக மண்டல மையம் ஆகிய இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதோடு இந்த மையங்களில் வேட்பாளா்களின் முகவா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா 3 முகவா்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. மூவரும் சுழற்சி முறையில் பணியாற்றலாம். ஒரே நேரத்தில் மூவரும் அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் 168 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இவா்களின் முகவா்களுக்கு வழங்குவதற்காக மொத்தம் 504 அனுமதி அட்டைகள் தயாா் செய்யப்பட்டன. இதில் அரசியல் கட்சிகளின் முகவா்கள் அனைவரும் அனுமதி அட்டைகளை வியாழக்கிழமை வாங்கிச் சென்றுவிட்டனா். மேலும், வாக்கு எண்ணும் மையங்களிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com