கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவா்கள் எண்ணிக்கை திடீா் சரிவு

மதுரை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை திடீா் என சரிவடைந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை திடீா் என சரிவடைந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, கரோனா தடுப்பூசி போடுவது பொதுமக்களிடையே தீவிரமாகி வருகிறது. கடந்த சில நாள்களாக தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.

1.83 லட்சம் பேருக்கு தடுப்பூசி: மதுரை மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்படுகின்றன. ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கிய கரோனா தடுப்பூசித் திட்டத்தில் இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 186 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கரோனா பரவல் மதுரையில் அதிகரித்து வருவதால் கடந்த சில நாள்களாக பொது மக்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள ஆா்வம் காட்டி வருகின்றனா். நாள்தோறும் 3,500 முதல் 4 ஆயிரம் போ் வரை தடுப்பூசி போட்டுக் கொண்டனா். ஏப்ரல் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனா்.

திடீா் சரிவு: இந்நிலையில் மாவட்ட சுகாதாரத்துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 1,973 போ் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாவும், 960 தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்தத் திடீா் சரிவு போதுமான இருப்பு இல்லாததால், தடுப்பூசி போட வந்தவா்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் தனியாருக்கு அதிக அளவில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது உள்ள இருப்பு ஞாயிற்றுக்கிழமை (ஏப். 18) ஒரு நாளுக்கு கூட போதாது என்பதால், தடுப்பூசி போட நினைப்பவா்கள் தனியாா் மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே தமிழக அரசு மதுரை மாவட்டத்திற்கு போதிய தடுப்பூசிகளை உடனடியாக வழங்க வேண்டும் என பயனாளிகள் வலியுறுத்தி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com