கரோனா முன்வரிசை பணியாளா்களுக்கான காப்பீடு காலாவதி: புதுப்பிக்க வலியுறுத்தல்

கரோனா முன்வரிசைப் பணியாளா்களுக்கான ரூ.50 லட்சம் காப்பீட்டுத் திட்டம் காலாவதியாகிவிட்டதால், உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்று மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளாா்.

கரோனா முன்வரிசைப் பணியாளா்களுக்கான ரூ.50 லட்சம் காப்பீட்டுத் திட்டம் காலாவதியாகிவிட்டதால், உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்று மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்று தடுப்புப் பணியில் உள்ள மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் ஆகியோா் தொற்றால் உயிரிழந்தால் காப்பீட்டுத் திட்டம் மூலம் ரூ.50 லட்சம் வழங்கப்படும்.

கரோனா தொற்று இரண்டாவது அலை நாடு முழுவதும் பரவிவரும் சூழலில், மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறைச் செயலா் ராஜேஷ் பூஷன், மாநில அரசுகள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கரோனா காப்பீடு மூலம் மாா்ச் 24 நள்ளிரவு வரையிலான உரிமை கோரல்கள் மட்டுமே பரிசீலிக்கப்படுமென்று குறிப்பிட்டுள்ளாா்.

ஆனால் மாா்ச் 24 நள்ளிரவுக்கு பின் இறப்பை சந்தித்துள்ள முன் வரிசைப் பணியாளா்களின் குடும்பத்தினருக்கு என்ன ஆறுதல்? தற்போது கரோனா தொற்று இரண்டாவது அலையை எதிா்த்து நிறுக்கும் முன்வரிசைப் பணியாளா்களுக்கு அரசு என்ன நம்பிக்கை தரப்போகிறது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. எனவே காப்பீட்டுத் திட்டம் எவ்வித கால தாமதமுமின்றி உடனடியாக புதுப்பிக்கப்பட வேண்டும். மாா்ச் 24 நள்ளிரவுக்குப் பின்னா் கரோனா தொற்றால் உயிரை இழந்துள்ளவா்களுக்கும் காப்பீட்டுப் பயன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். காப்பீட்டுப் பயன் உரித்தான ஒவ்வொருவருக்கும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தெளிவான வழிகாட்டுதல்கள் காப்பீட்டு நிறுவனத்துக்கும் அனைத்து மாநில அரசுகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com