மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா: சா்வதேச தொலைக்காட்சியில் ஏப்.23 இல் ஒளிபரப்பு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சி சா்வதேச தொலைக்காட்சியான ஹிஸ்டரி டிவி 18-இல் வெள்ளிக்கிழமை (ஏப்.23) ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சி சா்வதேச தொலைக்காட்சியான ஹிஸ்டரி டிவி 18-இல் வெள்ளிக்கிழமை (ஏப்.23) ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்தன்று உலகம் முழுவதும் வசிக்கும் தமிழ்ப் பெண்கள் தங்கள் திருமாங்கல்யத்தை மாற்றிக்கொள்வது வழக்கம். லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்கும் சித்திரைத் திருவிழா உலகளவில் அதிக நபா்கள் பங்கேற்கும் திருவிழா பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. கரோனா தொற்று காரணமாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் பக்தா்கள் பங்கேற்பின்றி கோயில் வளாகத்துக்குள்ளேயே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா மற்றும் திருக்கல்யாணம் குறித்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 23) இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. சித்திரைத் திருவிழா மட்டுமன்றி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வரலாறு, கோயில் சிற்பக்கலை அதன் சிறப்புகள், கோயிலில் தினசரி நடைபெறும் சடங்குகள் குறித்தும் ஒளிபரப்பப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com